/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் குற்றச்சம்பவங்கள் கடந்தாண்டு 20 சதவீதம் குறைவு
/
ஆவடியில் குற்றச்சம்பவங்கள் கடந்தாண்டு 20 சதவீதம் குறைவு
ஆவடியில் குற்றச்சம்பவங்கள் கடந்தாண்டு 20 சதவீதம் குறைவு
ஆவடியில் குற்றச்சம்பவங்கள் கடந்தாண்டு 20 சதவீதம் குறைவு
ADDED : ஜன 06, 2025 01:21 AM

ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 2023ம் ஆண்டை விட, கடந்தாண்டு 20 சதவீதம் கொலை குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன.
அதேபோல், ஆதாயக் கொலை, கொலை முயற்சி, கலவரம், வழிப்பறி, செயின் பறிப்பு, போன் பறிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளன.
குறிப்பாக, ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள செங்குன்றம் சரகத்தில், போலீசார் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ரவுடிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இதன் காரணமாக, கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்தாண்டு, வெறும் எட்டு கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
சொத்து தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, சொத்து தொடர்பான வழக்குகளும் வெகுவாக குறைந்துள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக, சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த 232 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பதிவான வழக்கு விபரம் :
குற்றங்களின் வகை 2023 2024
கொலை 59 48
கொலை முயற்சி 73 40
கலவரம் 15 5
இதர வழக்குகள் 420 316
சாதிய வன்கொடுமை வழக்கு 23 10
ஆதாய கொலை 2 1
பூட்டு உடைப்பு 239 165
செயின் பறிப்பு 49 34
போன் பறிப்பு 73 61
பாலியல் பலாத்காரம் 10 9
விபத்தில் இறப்பு 420 415