/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் பாயின்ட்: அ.தி.மு.க.,தொண்டர்கள் அடிதடி
/
கிரைம் பாயின்ட்: அ.தி.மு.க.,தொண்டர்கள் அடிதடி
ADDED : டிச 31, 2025 04:01 AM
கொளத்துார்: கொளத்துார், பாரத் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48; கொளத்துார் பகுதி எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர். நேற்று மாலை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமி கவரைப்பேட்டை பொதுக்கூட்டத்திற்கு செல்ல, கொளத்துார் வழியே சென்றார். வழியில், ஆறுமுகம், அவருக்கு சால்வை அணிவித்தார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில், 65வது வட்ட செயலர் முருகதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் சிக்கினார்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே நேற்று குட்கா விற்பனையில் ஈடுபட்ட 'கோழி' பாபு, 29, இமான், 20, 'புல்லாத்தி' நவீன், 19, ஆகியோரை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்; 110 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மருந்தகத்தில்
திருடியவர் கைது
வண்ணாரப்பேட்டை:
மாதவரத்தைச் சேர்ந்தவர் குருபாலாஜி, 38; மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 5,000 ரூபாய், மொபைல் போன் திருடு போனது. விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித், 26, என்பவரை கைது செய்தனர்.
மாமூல்கேட்டவருக்கு 'கம்பி'
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ராதாகிருஷ்ணன், 55. நேற்று கடைக்கு வந்த மர்ம நபர், ராதாகிருஷ்ணனிடம் மாமூல் கேட்டு சரமாரியாக தாக்கி, 1,000 ரூபாயை எடுத்து சென்றார். விசாரித்த ஆர்.கே.நகர் போலீசார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜாவை, 42, நேற்று கைது செய்தனர்.
4 கடைகளில் திருட்டு
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே அகரமேல் பஜார் பகுதியில் உள்ள காய்கறி, மளிகை கடை என, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை உடைத்து, நேற்று அதிகாலை திருட்டு நடந்தது. இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

