/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நமக்கு நாமே' திட்டத்தில் செடிகள் வளர்ப்பு
/
'நமக்கு நாமே' திட்டத்தில் செடிகள் வளர்ப்பு
ADDED : மார் 03, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.ஏ.புரம்:'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், அரச மரங்களைச் சுற்றி செடிகள் வளர்க்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'சிங்கார சென்னை - நமக்கு நாமே' திட்டங்களின் மூலம் பல்வேறு இடங்கள் பசுமையாக இருக்க செடிகள் நடப்பட்டு வருகிறது.
அந்த முயற்சியில் ராப்ரா எனும் ராஜா அண்ணாமலை குடியிருப்போர் சங்கம் சார்பில், ஆர்.ஏ.புரம் நான்காவது பிரதான சாலையில், அரச மரங்களை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி, அதனுள் சிறியசெடிகள் வளர்க்கப்பட்டன.
இது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்படுகிறது.

