/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கறிக்கடை ஊழியரை வெட்டி மொபைல்போன் வழிப்பறி
/
கறிக்கடை ஊழியரை வெட்டி மொபைல்போன் வழிப்பறி
ADDED : அக் 21, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:செம்பியம், தீட்டி தோட்டம், ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் அகமது, 57; மட்டன் கடை ஊழியர். இவர், நேற்று அதிகாலை, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் ஆடு வாங்க, சைக்கிளில் சென்றார்.
கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் சென்ற போது, 'பைக்'கில் வந்த மர்ம நபர்கள், இடது கையில் கத்தியால் வெட்டி, கையில் வைத்திருந்த 16,000 ரூபாய் மதிப்புள்ள, 'ஓப்போ' ரக மொபைல் போன் மற்றும் 400 ரூபாயை பறித்துச் சென்றனர்.
காயமடைந்த ஜாபர் அகமது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

