/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆடுதொட்டியில் முதியவருக்கு வெட்டு
/
ஆடுதொட்டியில் முதியவருக்கு வெட்டு
ADDED : மார் 03, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, ஆடு தொட்டியில் ஆடு தோல் உரிக்கும் வேலை செய்து வருபவர் வெங்கடேசன், 60. நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், ஆடு தொட்டியில் இருந்த போது, அடையாளம் தெரியாத ஐவர், மது போதையில் வெங்கடேசனிடம் தகராறு செய்துள்ளனர். அவரை கத்தியால் வெட்டியும், தலையில் கல்லால் தாக்கி விட்டும் தப்பினர்.
படுகாயமடைந்த வெங்கடேசனை, ஆடு தொட்டியில் வேலை செய்யும் அவரது உறவினர் சுரேஷ் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனை அளித்த தகவலின்படி, மர்ம நபர்கள் ஐந்து பேரை புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

