UPDATED : ஜூலை 11, 2025 10:35 AM
ADDED : ஜூலை 11, 2025 12:16 AM
சென்னை: சென்னையில், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத, 14 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில், 2019 முதல் ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத 14 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கக்கூடாது என்பதற்காக, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணை மூலமாக, விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் முடிவை, இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.