/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் வீட்டு பாதுகாப்புக்கு 110 கேமரா பொருத்த முடிவு
/
முதல்வர் வீட்டு பாதுகாப்புக்கு 110 கேமரா பொருத்த முடிவு
முதல்வர் வீட்டு பாதுகாப்புக்கு 110 கேமரா பொருத்த முடிவு
முதல்வர் வீட்டு பாதுகாப்புக்கு 110 கேமரா பொருத்த முடிவு
ADDED : செப் 28, 2025 02:48 AM
சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, 'கோர்செல்' என்ற பாதுகாப்பு பிரிவு, பாதுகாப்பை வழங்கி வருகிறது. மேலும் அவரது இல்லம் மட்டுமின்றி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இப்பிரிவினர், பாதுகாப்பை கொடுத்து வருகின்றனர்.
அவரது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டை ஒட்டி 3.5 கி.மீ., சுற்றளவு முழுதும், 110 ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவை அமைக்க, சென்னை காவல் துறை முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது.
முதல்வர் வீட்டைச் சுற்றி செனடாப் சாலை, டி.டி.கே., சாலை, கே.பி., தாசன் சாலை, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை, சிவசங்கரன் சாலை உள்ளிட்ட சாலைகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.