/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆறு வாசனைகளில் தீபம் அகர்பத்திகள்
/
ஆறு வாசனைகளில் தீபம் அகர்பத்திகள்
ADDED : ஏப் 05, 2025 12:31 AM
சென்னை,'தீபம்' பிராண்ட் அகர்பத்திகளை, ஆறு வாசனைகளில் காளீஸ்வரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
காளீஸ்வரி நிறுவனம், 'கோல்டு வின்னர், கார்டியா, தீபம்' ஆகிய பிராண்டுகளில், எண்ணெய் வகைகளை விற்பனை செய்கிறது. பிரார்த்தனை மற்றும் தியானத்தில், அகர்பத்திகள் ஆழமான அமைதியை ஏற்படுத்துகின்றன. தற்போது, தீபம் பிராண்டில், காளீஸ்வரி நிறுவனம், அகர்பத்திகளை அறிமுகம் செய்துள்ளது.
இவை, மல்லிகை, லாவெண்டர், ரோஜா, மலர்கள், சாம்பிராணி, சந்தனம் ஆகிய ஆறு வாசனைகளில் கிடைக்கும். தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள அகர்ப்பத்திகள், கரி இல்லாதவை. குறைவான புகையை உருவாக்கும். தீபம் அகர்பத்திகள், 10 ரூபாய், 20 ரூபாய், 55 ரூபாய் என, மூன்று பாக்கெட்களில், அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.
*

