/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறல் கட்டடங்களின் விபரம் சி.எம்.டி.ஏ., தளத்தில் 'மிஸ்சிங்'
/
விதிமீறல் கட்டடங்களின் விபரம் சி.எம்.டி.ஏ., தளத்தில் 'மிஸ்சிங்'
விதிமீறல் கட்டடங்களின் விபரம் சி.எம்.டி.ஏ., தளத்தில் 'மிஸ்சிங்'
விதிமீறல் கட்டடங்களின் விபரம் சி.எம்.டி.ஏ., தளத்தில் 'மிஸ்சிங்'
ADDED : மார் 07, 2024 12:17 AM
சென்னை, சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூலைக்கு பின், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், எவ்வித சட்ட ரீதியான தடையும் இல்லை. ஆனால், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மவுனமாகவே இருக்கின்றனர். இதனால், முதல்வரின் தனிப்பிரிவு, நீதிமன்றம் என, பொதுமக்கள் செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், விதிமீறல் கட்டடங்கள் மீதான புகார் குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்தது.
விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விபரங்களை, பொதுமக்கள் பார்வைக்கும், துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. ஆரம்பத்தில், நடவடிக்கை விபரங்கள் வெளியாகின. தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி, விதிமீறல் கட்டடங்கள் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களையும், இணையதளத்தில் சி.எம்.டி.ஏ., வெளியிட்டது. இது, வீடு வாங்கும் பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்தது.
ஆனால், 2023, 2024 ஆண்டுகளில் இந்த விபரங்கள் வெளியிடுவதை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திடீரென நிறுத்தி உள்ளனர்.
இதனால், வீடு வாங்கும் மக்கள், சம்பந்தப்பட்ட கட்டடம் தொடர்பான புகார்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

