/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சின்னாபின்னமான சாலைகள்; திணறும் வாகன ஓட்டிகள் யார் சீரமைப்பது என தட்டிக்கழிக்கும் அரசு துறைகள்
/
சின்னாபின்னமான சாலைகள்; திணறும் வாகன ஓட்டிகள் யார் சீரமைப்பது என தட்டிக்கழிக்கும் அரசு துறைகள்
சின்னாபின்னமான சாலைகள்; திணறும் வாகன ஓட்டிகள் யார் சீரமைப்பது என தட்டிக்கழிக்கும் அரசு துறைகள்
சின்னாபின்னமான சாலைகள்; திணறும் வாகன ஓட்டிகள் யார் சீரமைப்பது என தட்டிக்கழிக்கும் அரசு துறைகள்
ADDED : அக் 30, 2025 12:29 AM

சென்னை: மிகவும் 'தரம்' நிறைந் ததாக போடப்பட்டதால், வடகிழக்கு பருவ மழை துவங்கிய சில நாட்களிலேயே, சென்னையில் பெரும்பாலான சாலைகள் சின்னாபின்னமாகி, வாகன ஓட்டிகளை திணறடிக்கின்றன. சாலையை சீரமைக்க வேண்டிய நிலையில், எங்கள் பொறுப்பு இல்லை என, மாநகராட்சியும், அரசு துறைகளும் ஆளாளுக்கு தட்டிக் கழிக்கின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில நாள் மழைக்கே, சென்னையில் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன.
மெத்தனம் உட்புற சாலைகள் மட்டுமல்ல பிரதான சாலைகளும் அதே நிலைதான். பெரும்பலான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது.
ஆனால், போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்காமல் தொடர்ந்து, அரசும், மாநகராட்சியும் மெத்தனமாக உள்ளன.
குறிப்பாக, மாநகராட்சி சாலைகளை அந்தந்த மண்டலம் வாரியாக சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை பெரிய அளவில் சாலை, 'பேட்ச்ஒர்க்' பணியை துவங்கவில்லை.
அதேபோல், மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில், மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூறுகிறது.
ஆனால், மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநில நெடுஞ்சாலை போன்ற அரசு துறைகள், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை துவங்காமல் இருப்பதால், மழை நின்றும் வாகன ஓட்டிகள் சேதடைமந்த சாலைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
5,000 சாலைகள் இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. இச்சாலைகளை, தற்காலிக முறையில் சீரமைக்க மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜனவரிக்குபின் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும்.
அதேபோல், மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில், மெட்ரோ ரயில் நிர்வாகம்தான் சாலையை சீரமைக்க வேண்டும்; ஆனால் கண்டுகொள்ளவில்லை. முக்கிய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தும், அத்துறையும் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் உள்ளது.
சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி மட்டுமே சீரமைக்க வேண்டும் என பொதுவான கருத்து உள்ளது. தற்போது மழை நின்றுள்ளதால், விரைந்து சாலை சீரமைப்பை துவக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநில நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவங்க தான் பொறுப்பு
சென்னையில், 387 கி.மீ., நீளத்திற்கு, 471 பேருந்து வழித்தட சாலைகள்; 5,270 கி.மீ., நீளத்திற்கு, 34,640 உட்புற சாலைகள், 16 சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களையும் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
அதேபோல், அண்ணா சாலை, 100 அடி சாலைகள், மேம்பாலங்கள் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாைலகளை மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது.

