/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் சின்ன நொளம்பூர் குடியிருப்பு வாசிகள் உற்சாகம்
/
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் சின்ன நொளம்பூர் குடியிருப்பு வாசிகள் உற்சாகம்
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் சின்ன நொளம்பூர் குடியிருப்பு வாசிகள் உற்சாகம்
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் சின்ன நொளம்பூர் குடியிருப்பு வாசிகள் உற்சாகம்
ADDED : ஜன 06, 2025 01:59 AM

நொளம்பூர்:'தினமலர்' நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவெல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, சென்னையில் பல்வேறு பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தப்படுகிறது.
நிகழ்ச்சியை, 'கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், நாயுடு ஹால், போகா ஈவென்ட், ராஜா எலக்ட்ரிக் மற்றும் ஹார்டுவேர்ஸ் ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
அந்த வகையில், சின்ன நொளம்பூர் உள்ள வி.ஜி.என்., மினெர்வா அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று பிற்பகல் 2:00 மணி முதல் ‛கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி நடந்தது.
இதில், குடியிருப்பு பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. குடியிருப்பு வாசிகள் உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்நிகழ்வில், மாட்டு வண்டியில் சிறுவர்களை அழைத்து, குடியிருப்பிற்குள்ளே வலம் வந்தனர். இதை குழந்தைகள் கூச்சலிட்டு ரசித்தனர்.
தொடர்ந்து சமையல் போட்டி, உறியடி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மினி மாரத்தான், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
இவற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
'தினமலர்' கார்னிவெல் கொண்டாட்டம் கலகலப்பாக இருந்தது. குடியிருப்புவாசிகள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றனர். மாட்டு வண்டி சவாரியில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, மகிழ்ச்சியாக பயணித்ததனர்.
குடியிருப்பில் உள்ள அனைவருக்கும், மறக்க முடியாத அனுபவமாக மாறியது. எங்கள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- முரளிதரன்.ஜி, 51,
'வி.ஜி.என்., மினெர்வா' குடியிருப்பு நலச்சங்க தலைவர்.