/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாம்பாக்கம் அப்பார்ட்மென்டில் 'தினமலர் கார்னிவெல்'; செம ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்த குடியிருப்பு மக்கள்
/
மாம்பாக்கம் அப்பார்ட்மென்டில் 'தினமலர் கார்னிவெல்'; செம ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்த குடியிருப்பு மக்கள்
மாம்பாக்கம் அப்பார்ட்மென்டில் 'தினமலர் கார்னிவெல்'; செம ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்த குடியிருப்பு மக்கள்
மாம்பாக்கம் அப்பார்ட்மென்டில் 'தினமலர் கார்னிவெல்'; செம ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்த குடியிருப்பு மக்கள்
ADDED : ஆக 25, 2025 01:33 AM

திருப்போரூர்; மாம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த, 'தினமலர் கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை உற்சாகத்துடன் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி துவக்கப்பட்டது.
இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அந்தவரிசையில், கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ., யூனிட்டி என்க்ளேவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழுடன் 'ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், டயா பூஸ்ட்டர், ஸ்பிரிங் பூட்ஸ் டான்ஸ் அகாடமி' ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்தன.
சரியாக மாலை 4:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது; குடியிருப்பின் சுட்டீஸ் முதல் பெரியோர் வரை திரண்டு வர களைகட்ட துவங்கியது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட விளையாட்டு மையங்களும் இடம்பெற்றன.
மினி மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனால், அப்பார்ட்மென்ட் வளாகம் இரவு 9:00 மணி வரை விழாக்கோலம் பூண்டது.
நிகழ்ச்சியின் இறுதியில், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
'டயா பூஸ்டர்' நிறுவனம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை குடியிருப்பு மக்களுக்கு இலவசமாக வழங்கியது.

