/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி மாநில பால் பேட்மின்டனில் 'சாம்பியன்'
/
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி மாநில பால் பேட்மின்டனில் 'சாம்பியன்'
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி மாநில பால் பேட்மின்டனில் 'சாம்பியன்'
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி மாநில பால் பேட்மின்டனில் 'சாம்பியன்'
ADDED : ஆக 12, 2025 12:35 AM

சென்னை, மாநில பூப்பந்தாட்ட போட்டியில், மாணவர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., அணி வி.எஸ்.ஏ., சேலம் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு, கல்லுாரி அணிகளுக்கு இடையே, மாநில அளவில் 'பால் பேட்மின்டன்' எனும் பூப்பந்தாட்ட போட்டி நடத்தப்படுகிறது.
இதில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப் பாக்கம் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டியில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பிரிவில் 16 அணிகளும் மாணவியர் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன.
மாணவர் பிரிவில் செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம்., அணி, வி.எஸ்.ஏ., சேலம், சென்னை செயின்ட் ஜோசப், பொள்ளாச்சி எஸ்.டி.சி., அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதன் இறுதி நாள் போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன. இதில் எஸ்.ஆர்.எம்., அணியுடன் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி மோதியது. அசத்தலாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., அணி 35 - -19, 35 - 29 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
சூப்பர் லீக்கில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற எஸ்.ஆர்.எம்., அணி, புள்ளி அடிப்படையில் முதலிடத்தை பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இரண்டு வெற்றி பெற்ற செயின்ட் ஜோசப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது.
மாணவியர் பிரிவு இறுதி ஆட்டத்தில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி, லேடி டோக் கல்லுாரி அணியை 35 - -26, 35 - -10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, வெற்றியை பதிவு செய்தது.
சூப்பர் லீக் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி முதல் இடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இரண்டு வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லுாரி அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது.