/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது
/
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : ஏப் 23, 2025 12:13 AM

கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோட்டையை நோக்கி போராட்டம் அறிவித்தனர்.
பல மாவட்டங்களில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டனர். அங்கிருந்து கோட்டை நோக்கி சென்ற அவர்களை கோயம்பேடு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அரும்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.