/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட தலைவர் நேர்காணல் காங்கிரசில் கோஷ்டி மோதல்
/
மாவட்ட தலைவர் நேர்காணல் காங்கிரசில் கோஷ்டி மோதல்
மாவட்ட தலைவர் நேர்காணல் காங்கிரசில் கோஷ்டி மோதல்
மாவட்ட தலைவர் நேர்காணல் காங்கிரசில் கோஷ்டி மோதல்
ADDED : நவ 29, 2025 03:28 AM
சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் நாஞ்சில்பிரசாத். இவர், இறந்து மூன்றாண்டுகளாகியும் தலைவர் பதவி காலியாகவே உள்ளது.
ஆறு பேர் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மாவட்ட தலைவர் பதவி கேட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அம்பத்துாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் மேலிட தேர்தல் பார்வையாளரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ரகுஷர்மா, மாவட்ட தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு வழங்கினார்.
அப்போது, மாவட்ட தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் நிர்வாகிகள் மத்தியில் கோஷ்டி மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரகுஷர்மா, மைக்கில் 'டோஸ்' விட்டார். பின், அனைவரும் மேடையிலிருந்து கீழ் இறங்கி, தங்களின் இருக்கையில் அமர்ந்தனர்.

