/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது
/
'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது
ADDED : நவ 29, 2025 03:28 AM

சென்னை: உரிய ஆவணம் ஏதுமின்றி, விரைவு ரயிலில் கல்லுாரி மாணவர் எடுத் து வந்த 62.50 லட்சம் ரூபாய் 'ஹவாலா' பணத்தை, போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில், ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணியரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில், வா லிபர் ஒருவரிடம் விசாரிக்கும்போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், கட்டுகட்டாக 62.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதும் இல்லை.
தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த கல்லுாரி மாண வர் கவுதம், 30 என்பது தெரிய வந்தது. நெல் லுார் பகுதியில் தங்க நகை வியாபாரி ஒருவர், சவுகார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் பணத்தை தரக் கூறியதாகவும் தெரிவித் தார்.
இதையடுத்து, மாணவர் கவுதம் மற்றும் பணத்தை, வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

