/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சிறார்கள் உற்சாகம்
/
மாவட்ட ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சிறார்கள் உற்சாகம்
மாவட்ட ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சிறார்கள் உற்சாகம்
மாவட்ட ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சிறார்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 30, 2025 03:51 AM

சென்னை:நுங்கம்பாக்கத்தில் நடந்த மாவட்ட அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், 100க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
'ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் ரோலர் சங்கம்' ஆதரவுடன், சென்னை ரோல்பால் ரோலர் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, நுங்கம்பாக்கம் கிரசன்ட் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், 11, 14, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டோர் என, இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
காலை நடந்த துவக்க விழாவில், 'தினமலர்' நாளிதழின் இணை இயக்குநரும், சென்னை ரோல்பால் ரோலர் ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவருமான ஆர்.லட்சுமிபதி, போட்டிகளை துவக்கி வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
போட்டியில், சென்னையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில், 11 வயதுக்குட்பட்ட பிரிவுக்கு மட்டும், மாநில தேர்வு போட்டியாக நடத்தப்பட்டன. இருபாலரிலும் சிறந்த வீரர், வீராங்கனையராக தலா, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், ஜூலை 19ம் தேதி, தஞ்சையில் நடக்கவுள்ள மாநில போட்டியில், சென்னை மாவட்ட அணியாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
துவக்க விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ரோல்பால் சங்கத்தலைவர் அஸ்வின் மகாலிங்கம், செயலர் பி.தணிகைவேல், சென்னை மாவட்ட ரோல்பால் சங்க துணை செயலர் சிவா, மாநில ரோல்பால் சங்க அதிகாரி சுப்பிரமணியன், சர்வதேச ரோல்பால் சங்க இயக்குநர் ஸ்டீபன் டேவிட் ஆகியோர் பங்கேற்றனர்.