/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் ராயப்பேட்டை அணி வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் ராயப்பேட்டை அணி வெற்றி
ADDED : செப் 08, 2025 06:15 AM
சென்னை: டி விஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ராயப்பேட்டை சி.சி., அணி, 139 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், பல்வேறு டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், பல மைதா னங்களில் நடக்கின்றன.
அந்த வரிசையில், நேற்று முன்தினம், சேத்துப்பட்டு, சென்னை பல்கலை மைதானத்தில் நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடந்தது. ராயப்பேட்டை சி.சி., அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியில், எழில் ராஜ் - 76, அருண்குமார் - 79, ஜெயபிரகாஷ் - 79 என, மூன்று பேர் அரைசதம் கடந்து ரன்கள் குவித்ததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி, அடுத்து களமிறங்கிய சுமங்கலி ஹோம்ஸ் அணி, 42.4 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆல் அவுட்டானது. இதனால், 139 ரன்கள் வித்தியாசத்தில் ராயப்பேட்டை அணி அபார வெற்றி பெற்றது.
ஏ.எம்., ஜெயின் கல்லுாரியில் நேற்று நடந்த இரண்டாவது டிவிஷன் ஆட்டத்தில், பன்ட்ஸ் சி.சி., மற்றும் எழும்பூர் ஆர்.சி., அணிகள் மோதின. முதலில் விளையாடிய பன்ட்ஸ் அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 208 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த, எழும்பூர் அணி, 42.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 209 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருவள்ளூர், முருகப்பா மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், கோரமண்டல் எஸ்.சி., அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில், எம்.சி.சி., அணியை தோற்கடித்தது.