/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., கவுன்சிலர் மகன் பட்டா கத்திகளுடன் கைது
/
தி.மு.க., கவுன்சிலர் மகன் பட்டா கத்திகளுடன் கைது
ADDED : ஜன 29, 2025 12:26 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
ராமாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் ரோந்து சென்ற போது, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி ஒன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் லில்லி என்பவரின் வீட்டின் பின்புறம், கத்தியுடன் நின்றிருந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பியோடினார்.
போலீசார் சென்று பார்த்த போது, இரண்டு பட்டா கத்திகள் கிடந்தன. விசாரணையில், தப்பியோடியவர், தி.மு.க., கவுன்சிலர் லில்லி மகன் கோகுல்நாத், 24, என்பது தெரிந்தது.
இதையடுத்து, பட்டா கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், கோகுல்நாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

