/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., நிர்வாகிகள் இடையூறு சாலை புதுப்பிப்பு பணி நிறுத்தம்
/
தி.மு.க., நிர்வாகிகள் இடையூறு சாலை புதுப்பிப்பு பணி நிறுத்தம்
தி.மு.க., நிர்வாகிகள் இடையூறு சாலை புதுப்பிப்பு பணி நிறுத்தம்
தி.மு.க., நிர்வாகிகள் இடையூறு சாலை புதுப்பிப்பு பணி நிறுத்தம்
ADDED : நவ 12, 2025 12:27 AM
பனையூர்: சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, இ.சி.ஆர்., பனையூர், பள்ளிக்கூட சாலையில் உள்ள, 3 முதல் 9 வரையிலான தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதில், 3, 4வது தெருக்களை தவிர, இதர தெருக்களில் கவிதா என்ற ஒப்பந்த நிறுவனம், சில தினங்களுக்கு முன் சாலை அமைத்தது.
ஆனால், சில தி.மு.க., நிர்வாகிகள், 3, 4வது தெருக்களில் சாலை அமைக்க விடாமல் பிரச்னை செய்தனர்.
இதனால், இரண்டு தெருக்களில் சிமென்ட் சாலை அமைப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தினர்.
இதுகுறித்து, 3, 4வது தெருவில் வசிப்போர் கூறியதாவது:
பல ஆண்டு கோரிக்கைக்கு பின், சாலைகள் புதுப்பிக்கப்படுகிறன. சில தி.மு.க., நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரச்னையை காரணம் காட்டி, சாலை போடவிடாமல் தடுக்கின்றனர்.
தொகுதி எம்.எல்.ஏ., கவுன்சிலர் தலையிட்டு பேசியும், தி.மு.க., நிர்வாகிகள் சாலை போட அனுமதிக்கவில்லை. இதனால், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சிலர் இடையூறு செய்வதால், தற்காலிகமாக சாலை போடுவதை நிறுத்தி உள்ளோம். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் உத்தரவின்படி, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

