/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9 நல்வாழ்வு மையங்களுக்கு மருத்துவர்கள் நியமனம்
/
9 நல்வாழ்வு மையங்களுக்கு மருத்துவர்கள் நியமனம்
ADDED : மே 02, 2025 12:00 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், ஒன்பது நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விரைந்து பணியாளர்களை நியமித்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு பணியாளர் என்ற அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த ஒன்பது மையங்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
இந்த மையங்கள், காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை; மாலை, 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.
வெளி நோயாளிகள் சிகிச்சை, கர்ப்பிணி பரிசோதனை, தடுப்பூசி, அவசரகால தடுப்பு சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும்.