/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவன பங்கில் ரூ.27 கோடி மோசடி கைதான நபரிடம் ஆவணங்கள் பறிமுதல்
/
நிறுவன பங்கில் ரூ.27 கோடி மோசடி கைதான நபரிடம் ஆவணங்கள் பறிமுதல்
நிறுவன பங்கில் ரூ.27 கோடி மோசடி கைதான நபரிடம் ஆவணங்கள் பறிமுதல்
நிறுவன பங்கில் ரூ.27 கோடி மோசடி கைதான நபரிடம் ஆவணங்கள் பறிமுதல்
ADDED : ஆக 31, 2025 03:28 AM

ஆவடி:தனியார் நிறுவனத்தின் பங்கில், 27 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகமது கபீர், 48. இவர், பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் 'செய்கோடேன்கி இந்தியா' என்ற தனியார் நிறுவனத்தில் நிறுவன இயக்குநர் மற்றும் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான காதர் மைதீன் என்பவர், அவரது சகோதரர் மன்சூர் அலியை பொது மேலாளராக நியமித்துள்ளார்.
பின், அவரது பங்கு மதிப்பு 35 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தி, காதர் மைதீன் கையெழுத்து போட்டு, நிறுவன விதிமீறி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
இதனால், அகமது கபீர் பங்கு மதிப்பு 24.5 சதவீதமாக குறைந்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, காதர் மைதீன் மேற்படி நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து 2.25 கோடி ரூபாய் கையாடல் செய்து, அந்த பணத்தில் அவரது சகோதரர் மன்சூர் அலியுடன் சேர்ந்து 'அஜித் இந்தியா என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் புது நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.
சகோதரர்களின் மோசடியால், அகமது கபீருக்கு 27 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த சாலிகிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி, 50, என்பவரை, கடந்த 20ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 28ம் தேதி தனிப்படை போலீசார் மன்சூர் அலியை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணைக்கு பின், 'செய்கோ டேன்கி இந்தியா' நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் இரண்டு கணினிகளை பறிமுதல் செய்து, மீண்டும் நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்
தலைமறைவாக உள்ள காதர் மைதீனை, போலீசார் தேடி வருகின்றனர்.