/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி டான் பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
/
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி டான் பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி டான் பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி டான் பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஆக 09, 2025 12:30 AM

சென்னை, சாய்ராம் குழுமம் சார்பில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில், சென்னை டான் பாஸ்கோ பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், சாய்ராம் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. 25 நாட்கள் நடந்த இந்த போட்டியின் இறுதி போட்டி, இரு தினங்களுக்கு முன் நடந்தது.
இதில் டான் பாஸ்கோ பள்ளி அணி, எபினேசர் பள்ளி அணியை எதிர்க்கொண்டது. இதில் டாஸ் வென்ற எபினேசர் பள்ளி அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த சென்னையின் டான் பாஸ்கோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 96 ரன்கள் வெற்றி இலக்குடன் எபினேசர் பள்ளி அணி களமிறங்கியது. விறுவிறுப்பான போட்டியில் 76 ரன்கள் மட்டுமே அடித்து, அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சாம்பியன் கோப்பை கைப்பற்றிய டான் பாஸ்கோ அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த எபினேசர் பள்ளி அணி, கோப்பை மற்றும் 50,000 ரூபாய் பரிசு தொகை பெற்றது.