/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..
/
ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..
ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..
ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..
ADDED : பிப் 17, 2025 01:16 AM
பாலவாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு- 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம், வார்டு -183க்கு உட்பட்ட பாலவாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், வார்டு- 192க்கு உட்பட்ட நீலாங்கரை பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் பணி, 60 கோடி ரூபாய் மதிப்பில், சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கொட்டிவாக்கத்தில், மொத்தமுள்ள 41 தெருக்களில், 6 கி.மீ., நீளம், பாலவாக்கத்தில் 72 தெருக்களில் 7.5 கி.மீ., நீளம், நீலாங்கரையில் 6 கி.மீ., நீளத்திற்கு இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கே.எப்.டபிள்யு., எனப்படும் ஜெர்மன் டெவலப்மென்ட் வங்கியின் நிதியுதவியில், எம் - 2 கோவளம் வடிகால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
இவ்வங்கியில், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் கடன் பெற்று, இத்திட்டத்தை துவங்குகிறது.
இக்கால்வாய், பக்ஹிங்காம் கால்வாயில் இணைக்கப்படும். இத்திட்டத்தை, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.