ADDED : டிச 19, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம், பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் கனகா, 33. நேற்று முன்தினம், இவர் தன் குழந்தைகளை, இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு, வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஹாரன் அடித்ததில், இவருக்கும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகன ஓட்டுனருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த நபர், ஆடையை அவிழ்த்து காட்டி ஆபாசமாக நடந்துள்ளார்.
துரைப்பாக்கம் போலீசார்விசாரித்தனர். அதில், அந்த சரக்கு வாகன ஓட்டுனர் பெருங்குடி, சந்தியா நகரை சேர்ந்த தமிழரசன், 34, என தெரிந்தது. போலீசார், அவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், நேற்று கைது செய்தனர்.

