/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர், நடத்துனர்கள் எம்.டி.சி.யில் கவுரவிப்பு
/
ஓட்டுனர், நடத்துனர்கள் எம்.டி.சி.யில் கவுரவிப்பு
ADDED : மார் 08, 2024 12:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், கடந்த மாதம் அதிக நாட்கள் பணிக்கு வந்த 41 ஓட்டுனர்கள், 40 நடத்துனர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
பயணியர் தவறவிட்ட பணப்பை, மொபைல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த, 18 நடத்துனர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடந்த மாதம் 7-ம் தேதி, 28பி வழித்தட பேருந்தில் தவறவிட்ட 7 வயது பெண் குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனரும் கவுரவிக்கப்பட்டனர்.

