/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சண்டையை விலக்கிய ஓட்டுனருக்கு வெட்டு
/
சண்டையை விலக்கிய ஓட்டுனருக்கு வெட்டு
ADDED : மார் 19, 2025 12:14 AM
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 34; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, எம்.கே.பி.நகர், மத்திய குறுக்கு தெருவில் உள்ள மதுபான கடைக்கு சென்றபோது, அங்கு இருவர் தகராறில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க சென்ற கார்த்திக்கை, மர்ம நபர் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த கார்த்திக்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எம்.கே.பி.நகர் போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 35, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ரஞ்சித்குமார், மதுபான கடையில் மதுவாங்கி கொண்டிருந்தபோது, மூவர் அவரது பாக்கெட்டில் இருந்த 350 ரூபாயை எடுத்து கொண்டு அடித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், வீட்டுக்கு சென்று கத்தி எடுத்து வந்து மதுபான கடையில் இருந்த மூவரையும் வெட்ட முயன்றுள்ளார். அப்போது தடுக்க வந்த கார்த்திக்கை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சித்குமாரை நேற்று கைது செய்தனர்.