ADDED : நவ 05, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஜாம்பஜார் பகுதியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜாம்பஜார் போலீசார் நேற்று காலை மல்லன் பொன்னப்பன் தெருவில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
பின், அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, 70 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன், 22 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 70 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தன ர்.

