ADDED : நவ 05, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்கடை: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவையடுத்து, சென்னை முழுதும் போலீசார் போதை பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, பூக்கடை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில், நேற்று அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஆறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, வால்டாக்ஸ் சாலையிலிருந்து கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானம் வரை பேரணி வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கி போலீசார் பாராட்டினர்.

