UPDATED : அக் 16, 2026 11:47 PM
ADDED : அக் 16, 2026 11:44 PM
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சென்னை எழும்பூரில் இருந்து, வரும் 18ம் தேதி ஞாயிறு அதிகாலை 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அன்று காலை 11:45 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில், வரும் 20ம் தேதி இரவு 10:00 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இச்சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
