ADDED : மார் 27, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம், முத்தம்மன் கோவில் தெருவில், போலீசார் நேற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பையுடன் சுற்றிய மூதாட்டியை பிடித்து விசாரித்தபோது அவரிடம் விற்பனைக்காக 2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா, 60, என்பதும் இவர் மீது இதேபோல் மூன்று வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீசார், சாந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், புரசைவாக்கம் தானா தெருவில், 41.15 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களுடன் திரிந்த இருவரை, நேற்று முன்தினம் இரவு, வேப்பேரி போலீசார் பிடித்தனர்.
போதை பொருள் கடத்தியது சம்பந்தமாக, சூளை வி.வி.,கோவில் தெருவைச் சேர்ந்த ரவிசந்திரன், 57, விக்ரம்சிங், 38, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.