/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - திண்டிவனம் சாலையில் 20 ஆண்டுகளுக்கு பின் மின் விளக்கு
/
தாம்பரம் - திண்டிவனம் சாலையில் 20 ஆண்டுகளுக்கு பின் மின் விளக்கு
தாம்பரம் - திண்டிவனம் சாலையில் 20 ஆண்டுகளுக்கு பின் மின் விளக்கு
தாம்பரம் - திண்டிவனம் சாலையில் 20 ஆண்டுகளுக்கு பின் மின் விளக்கு
ADDED : டிச 30, 2025 04:55 AM
சென்னை: தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், 20 ஆண்டுகளுக்கு பின், புதிதாக மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, தாம்பரம் - திண்டிவனம் இடையிலான 122 கி.மீ., சாலை உள்ளது.
இந்த சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன் மின்கம்பங்கள் அமைத்து, விளக்குகள் பொருத்தப்பட்டன.
அவ்வப்போது பழுதடையும் மின்விளக்குகள், சாலை விரிவாக்கத்திற்கு ஏற்ப கேபிள்கள் மாற்றப்படவில்லை. இதனால், பல இடங்களில் கும்மிருட்டில் பயணிக்க வேண்டிய நிலை, வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, வண்டலுார், பரனுார், திண்டிவனம் என, பல இடங்களில் சாலையில் இருள் சூழ்ந்து கிடப்பதால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, இச்சாலையில், 8.50 கோடிரூபாயில் புதிதாக மின்விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலையின் இரண்டு புறங்களிலும் ஏற்கனவே 1,423 மின்விளக்குள், 47 மின்கோபுர விளக்குகள் உள்ளன. இவை புதுப்பிக்கப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி 579 மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றின் மின்பயன்பாட்டை கணக்கிடுவதற்கும், இயக்குவதற்கும், 45 இடங்களில் மின் மீட்டர், ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏழு இடங்களில் புதிதாக மின்கோபுர விளக்குகளும் அமைக்கப்படவுள்ளன. தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதத்திற்குள் அவை பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

