/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் - சென்ட்ரல் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
/
திருவள்ளூர் - சென்ட்ரல் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர் - சென்ட்ரல் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர் - சென்ட்ரல் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
ADDED : பிப் 12, 2025 12:42 AM
சென்னை, சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், முக்கியமானதாக சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம் மார்க்கம் உள்ளது. இந்த தடத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
இந்த ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே, காலஅட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்காமல், தாமதமாக செல்கிறது என பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா - கடற்கரை ரயில் நிலையம் தடத்தில், நேற்று பகலில் திடீரென பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் புறப்பட்ட மின்சார ரயில், பகல் 12:15 மணிக்கு நிறுத்தப்பட்டது.
அடுத்தடுத்து, வந்த மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 30 நிமிடம் கடந்தும் ரயில் மீண்டும் இயக்கப்படாததால், பயணியர் சிலர், ரயிலில் இருந்து இறங்கி பேருந்து, ஆட்டோ பிடித்து, சென்றனர். 45 நிமிடங்களுக்கு பிறகு, இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
எந்தவித அறிவிப்பும் இன்றி, மின்சார ரயில்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். வியாசர்பாடி ரயில் நிலையத்தில், புறநகர் மின்சார ரயில்கள் சில, நேற்று திடீரென நிறுத்தப்பட்டன.
இதே தடத்தில் நேற்று முன் தினமும் 40 நிமிடங்கள் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. அடிக்கடி இதுபோல ரயில்சேவை தாமதத்தால், கடும் மன வேதனை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.