ADDED : பிப் 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட பெருங்களத்துார் பிரிவு அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம், பெருங்களத்துார் காமராஜ் நகர், 33/ 11 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகத்தில் செயல்பட்டது.
இந்த அலுவலகமும், மின் கட்டண வசூல் மையமும், இன்று முதல் பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலை, இரணியம்மன் கோவில் பின்புறம், 110 கிலோ வோல்ட், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் துணைமின் நிலைய வளாகத்தில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்துஉள்ளது.

