ADDED : நவ 16, 2026 08:03 PM
தாம்பரம்: மாத ஓய்வூதியம், 9 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி, தாம்பரம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன், ஓய்வூதியர்கள் இன்று (நவ.,16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ.பி.எப்., ஓய்வூதியம் பெறும், 85 லட்சம் பேரில், 35 லட்சம் பேர், ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக பெறுகின்றனர். அதிகபட்சமாக 4,500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
அகவிலைப்படியுடன் சேர்த்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக, மாதம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அனைவருக்கும் உயர் ஓய்வூதியம் தர வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை இ.பி.எப்., ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில், தாம்பரம் மண்டல அலுவலகம் முன், இன்று ஆர்பாட்டம் நடந்தது. 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
