UPDATED : நவ 16, 2026 08:03 PM
ADDED : நவ 16, 2026 08:00 PM
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி ஆய்வகங்களை பார்வையிட, வரும் 30ம் தேதிக்குள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை ஐ.ஐ.டி.,யில், அனைவருக்கும் ஐ.ஐ.டி., எனும் திட்டத்தின் கீழ், ஐ.ஐ.டி., ஆராய்ச்சி ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜன., 2 முதல் 4ம் தேதி வரை, கல்வி நிறுவன திறந்தவெளி அரங்கு எனும் நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்கள், சென்னை ஐ.ஐ.டி.,யை பார்வையிடும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது.
ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தாக்க மையங்கள் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை பார்வையிடலாம்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் ஆகியோர், வரும் 30ம் தேதிக்குள், https://shaastra.org/open-house என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
