/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைந்தகரையில் தொடரும் நெரிசல் சாலையை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
/
அமைந்தகரையில் தொடரும் நெரிசல் சாலையை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
அமைந்தகரையில் தொடரும் நெரிசல் சாலையை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
அமைந்தகரையில் தொடரும் நெரிசல் சாலையை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 22, 2025 12:51 AM

அமைந்தகரை, சென்னையின் முக்கிய சாலைகளான பாரிமுனை, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில், பூந்தமல்லி பகுதியில் துவங்கி, அரும்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் என, பிராட்வே வரை, நாள் முழுதும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வளவு முக்கியமான இந்த சாலையில், பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை தொடர்கிறது.
குறிப்பாக, அரும்பாக்கம் - கோயம்பேடு, அமைந்கரை - கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட தடங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
நெரிசலை குறைப்பதற்காக, அண்ணா வளைவில் இருந்து, நெல்சன் மாணிக்கம் சாலைக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதிகளில் சாலை குறுகியதாக உள்ளதால், நாளுக்கு நாள் அப்பகுதியில் நெரிசல் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அமைந்தகரை 'டோல்கேட்' பேருந்து நிறுத்தம் அருகில், சாலையை நெடுஞ்சாலை துறை விரிவுபடுத்தியது. அதேபோல், அமைந்தகரை சந்தையை சுற்றியுள்ள 100 மீ., துாரத்திற்கு சாலையை விரிவுபடுத்த முன்வரவேண்டும்.
அதேபோல், கடைகளின் நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.