/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலாவதி 'பால்கோவா' ஆவினில் விற்பனை?
/
காலாவதி 'பால்கோவா' ஆவினில் விற்பனை?
ADDED : ஆக 05, 2025 12:22 AM

சென்னை, ஆவின் பாலகத்தில், காலாவதியான 'பால்கோவா' விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில், 'பால்கோவா' வாங்கினார். வீட்டிற்கு சென்று பால்கோவா பிரிந்து, குடும்பத்துடன் சுவைத்தனர்.
அப்போது, மூடியில் இருந்த தேதியை பார்த்தபோது, காலாவதியானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால், உடல் உபாதைகள் ஏற்படுமோ என அச்சம் அடைந்தனர்.
மேலும், பால்கோவா பாக்கொட்டில் காலாவதி தேதி குறித்த விபரத்தை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளதாக செந்தில் தெரிவித்தார்.

