ADDED : பிப் 28, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக, திருநாவுக்கரசு பணியாற்றி வருகிறார். இவர் நேற்று, சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அதில், என் பெயரில் போலி முகநுால் துவங்கி, நண்பர்களிடம் பணம் வசூலிக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து என் நண்பர்கள், எனக்கு தகவல் தெரிவித்தனர். எனவே, என் பெயரில் போலியாக துவங்கப்பட்ட முகநுால் பக்கத்தை முடக்கி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

