/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் மூடி உடைந்து பள்ளம் அடுத்தடுத்த நிகழ்வால் அச்சம்
/
வடிகால் மூடி உடைந்து பள்ளம் அடுத்தடுத்த நிகழ்வால் அச்சம்
வடிகால் மூடி உடைந்து பள்ளம் அடுத்தடுத்த நிகழ்வால் அச்சம்
வடிகால் மூடி உடைந்து பள்ளம் அடுத்தடுத்த நிகழ்வால் அச்சம்
ADDED : அக் 25, 2024 12:36 AM

நெற்குன்றம், நெற்குன்றம் மூகாம்பிகை நகர், மூன்றாவது பிரதான சாலையில், மழைநீர் வடிகால் மேல் மூடி உடைந்து தொடர்ந்து பள்ளம் ஏற்படுவதால், பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டதால், உலக வங்கி நிதியில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதில், நெற்குன்றம் மூகாம்பிகை நகர், மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர் பிரதான சாலை ஆகியவற்றில், சாலை நடுவே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இச்சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் மேல் மூடி உடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்த நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், பள்ளம் சீர் செய்யப்பட்டது.
தற்போது, அதே சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மேல் மூடி உடைந்து, மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் சீர்செய்யப்படாமல் உள்ளது.
இதனால், மழைநீர் வடிகால் பள்ளத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன், குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உடைந்த மழைநீர் வடிகால் மேல்மூடியை சீர் செய்வதுடன், மீண்டும் உடைய வாய்ப்புள்ள மேல் மூடிகளை ஆய்வு செய்து மாற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.