/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விக்டோரியா அரங்கை பார்க்க ரூ.25 கட்டணம் நிர்ணயம்
/
விக்டோரியா அரங்கை பார்க்க ரூ.25 கட்டணம் நிர்ணயம்
விக்டோரியா அரங்கை பார்க்க ரூ.25 கட்டணம் நிர்ணயம்
விக்டோரியா அரங்கை பார்க்க ரூ.25 கட்டணம் நிர்ணயம்
ADDED : ஜன 02, 2026 05:47 AM
சென்னை: மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள விக்டோரியா அரங்கை பார்வையிட, பொதுமக்களுக்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கம், தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
தரைத்தளத்தில் கண்காட்சி உள்ளிட்டவை இருப்பதால், பொதுமக்கள் முன்பதிவு செய்து, இலவசமாக பார்வையிட, மாநகராட்சி அழைப்பு விடுத்தது.
பலர் முன்பதிவு செய்யாமலேயே வந்ததால் சிக்கல் ஏற்பட்டு, ஒரே நாளில் மூடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அரங்கம் திறக்கப்பட்டது. விக்டோரியா அரங்கை இனி பொதுமக்கள் பார்வையிட, 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், https://gccservices.in/victoriapublichall என்ற இணையளத்தில், முன்பதிவு செய்வதும் க ட்டாயம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
அதேநேரம், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளி வாயிலாக முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லை.
முன்பதிவு செய்யாமல் நேரடியாக வருவோர், நுழைவாயில் உள்ள, 'க்யூஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்து, முன்பதிவு செய்யலாம்.
ஒருவருக்கு, ஒன்றரை மணி நேரம் வரை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

