/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்
/
மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்
மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்
மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்
ADDED : ஜன 02, 2026 05:47 AM
சென்னை: 'மூலதன நிதியில் இருந்து, 45.60 கோடி ரூபாய் மட்டுமே எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது' என, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டாஜான் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பல்கலையில் மூலதன நிதி எடுத்து பயன்படுத்தப்பட்டது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியான செய்திக்கு அவர் அளித்துள்ள விளக்கம்:
சென்னை பல்கலையில் பணியாற்றி, 2015 முதல் 2025 வரை ஓய்வுபெற்றோருக்கான நிலுவைத்தொகை, 95.44 கோடி ரூபாயாக இருந்தது. அதில், 52 கோடி ரூபாய் வழங்கப் பட்டுவிட்டது.
இந்நிலையில், 2007ல், 150 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன், சென்னை பல்கலையில் உருவாக்கப்பட்ட மூலதன தொகை, 2025ல், 318.85 கோடி ரூபாயாக இருந்தது.
அதன் வட்டித்தொகையில் இருந்து இதுவரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்ட நிலையில், நிலுவையில் இருந்த தொகையை, மூலதன நிதியில் இருந்து வழங்க, கடந்த நவ., 28ல் நடந்த ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி, பல்கலை விதிகளுக்கு உட்பட்டு, நிலுவை ஓய்வூதியம், பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு ஆகியவற்றை வழங்க, மூலதன தொகுப்பு நிதியின், முதிர்ச்சி அடைந்த வைப்பு நிதியில் இருந்து, 45.60 கோடி ரூபாய் மட்டுமே எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய முன்பணமாக. 38 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு ரீட்டாஜான் தெரிவித்துள்ளார்.

