ADDED : ஜன 02, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிமங்கலம்: மணிமங்கலம், ஆதனுாரைச் சேர்ந்தவர் அன்பரசன், 45. இவரது மனைவி பியுலா, பணிபுரியும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளுக்கு போன் செய்து, அன்பரசன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ஐந்துக்கும் மேற்பட்டோர், அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, அன்பரசன் கல்லால் தாக்கியதில் சுந்தரம்பாள், 32, என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மணிமங்கலம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.

