/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
/
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
ADDED : ஜன 02, 2026 05:46 AM
மதுரவாயல்: புத்தாண்டிற்காக கோவிலுக்கு சென்றபோது, இரு பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் விஜய், 27; கார் மெக்கானிக். இவரது தோழி ஜீவிதா, 21. இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
புத்தாண்டை முன்னிட்டு, இருவரும் நேற்று மாலை கோவிலுக்கு செல்வதற்காக 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வானகரத்திற்கு சென்றனர்.
மதுரவாயல் பைபாஸ் அணுகு சாலையில் சென்ற போது, அங்கிருந்த டீக்கடையில் டீ சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது, வேகமாக வந்த 'பஜாஜ் பல்சர்' பைக், இவர்களது ஸ்கூட்டரில் மோதியது.
இதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டதில், விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்சர் பைக்கை ஓட்டி வந்த, மதுரவாயல் கண்ணகி தெருவைச் சேர்ந்த கதிரவன், 24, பின்னால் அமர்ந்து வந்த மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த குமார், 26, மற்றும் ஜீவிதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், ஜீவிதா தனியார் மருத்துவமனையிலும், மீதமுள்ள இருவர் பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விஜய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

