/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமணமான 11 மாதங்களில் பெண் மருத்துவர் தற்கொலை
/
திருமணமான 11 மாதங்களில் பெண் மருத்துவர் தற்கொலை
ADDED : ஆக 26, 2025 12:27 AM
அம்பத்துார் திருமணமான 11 மாதங்களில், பெண் மருத்துவர் தற்கொலை செய்த கொண்ட நிலையில், ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.
அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசாருதீன், 31. இவரது மனைவி ஹுருல் சமீரா, 29. மருத்துவர்களான இருவரும், அண்ணா நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தனர்.
இருவருக்கும், 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த ஹுருல் சமீரா, படுக்கையறை மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், ஹுருல் சமீராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி, 11 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாராணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.