UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 11:56 PM
அ நிறம் | அளவு
தண்டையார்பேட்டை: ஸ்டீல் பட்டறையில் புகுந்த ‘ராக்கெட்’ பட்டாசு தீயால், ஸ்டீல் பட்டறை தீக்கிரையானது.
வண்ணாரப்பேட்டை, செல்லப்பா காலனி, வள்ளலார் நெடுஞ்சாலையில், ஸ்டீல் பட்டறை செயல்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, தீபாவளி கொண்டாட்டத்தின் போது, கொளுத்தப்பட்ட ‘ராக்கெட்’ பட்டாசு, ஸ்டீல் பட்டறையில் புகுந்து தீ விபத்து ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
பழைய பொருட்கள் மட்டுமே இருந்ததால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
