ADDED : டிச 26, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சென்னை அருகே உள்ள புழல் சிறையில், 3,500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள முதல் சிறை வளாகத்தில், தேவையற்ற ஆவணங்களை, சாக்கு பைகளில் போட்டு, ஒரு அறையில் வைத்துள்ளனர். இங்கு நேற்று காலை, 10:30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி அணைத்தனர். 'தீ விபத்தில் காகிதம், பிளாஸ்டிக் பைகள் பற்றி எரிந்து, புகை மூட்டமாக இருந்ததால், தீயை அணைக்க நீண்ட நேரம் ஆனது' என, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். விபத்து குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

