/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மாற்றியில் தீ விபத்து ஊழியர் காயம்
/
மின் மாற்றியில் தீ விபத்து ஊழியர் காயம்
ADDED : ஜன 16, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரவள்ளூர்,
கும்மிடிப்பூண்டி, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57. இவர், பெரியார் நகர் மின் வாரிய லைன் மேனாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் 1:00 மணியளவில், பெரியார் நகரில் மின்சார பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின் மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீயால், பழுது பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேசன் முகம் மற்றும் இடது கையில் தீக்காயம் ஏற்பட்டது.
அவரை மீட்ட சக ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள், ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 30 சதவீத தீக்காயங்களுடன் வெங்கடேசன் சிகிச்சை பெற்று வருகிறார். பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.