/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல் 'ஏசி' புறநகர் ரயில் சோதனை செங்கை தடத்தில் இயக்க திட்டம்
/
முதல் 'ஏசி' புறநகர் ரயில் சோதனை செங்கை தடத்தில் இயக்க திட்டம்
முதல் 'ஏசி' புறநகர் ரயில் சோதனை செங்கை தடத்தில் இயக்க திட்டம்
முதல் 'ஏசி' புறநகர் ரயில் சோதனை செங்கை தடத்தில் இயக்க திட்டம்
ADDED : ஜன 22, 2025 12:35 AM

சென்னை, சென்னையில் இயக்க உள்ள முதல், 'ஏசி' மின்சார ரயில் இயக்கி, நேற்று சோதனை நடத்தப்பட்டது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் விரைவுப் பாதையில், 'ஏசி' மின்சார ரயில் இயக்க தெற்கு ரயில்வே, 2019ல் வாரியத்திடம் கோரிக்கை விடுத்தது.
அதன்படி, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டத்துக்கு இரண்டு, 'ஏசி' மின்சார ரயில்களை தயாரிக்கும்படி, ஐ.சி.எப்.,க்கு வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது.
ஐ.சி.எப்., ஆலையில் மின்சார, 'ஏசி' ரயில் தயாரிப்பு பணிகள் சில மாதங்களாக நடந்தன. தற்போது, தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதால், ஐ.சி.எப்., வளாகத்தில் உள்ள ரயில் பாதையில், இந்த ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம், 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயிலில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த, சில நாட்களில் இந்த ரயில் சென்னை ரயில் கோட்டத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, விரைவு ரயில் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டமும் நடத்தப்படும். இரண்டு மாதங்களில், இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும், என சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.