/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
/
வாரிய அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
ADDED : செப் 20, 2025 01:07 AM

சென்னை, செப். 20-
டுமீங்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை, மீனவர்களுக்கே ஒதுக்கக்கோரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை சாந்தோம் அருகே உள்ள டுமீங்குப்பத்தில், 14 மாடிகள் உடைய, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பை, இந்த பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கே வழங்க வேண்டும்; மீனவர்கள் அல்லாதோருக்கு வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், மெரினா காமராஜர் சாலையில் உள்ள வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட னர்.
பின், வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரியாவை சந்தித்து, மனு அளித்தனர்.